Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தீ விபத்தில் மக்களை காக்கும் ரோபோ; மயிலம் கல்லுாரி மாணவர்கள் சாதனை

தீ விபத்தில் மக்களை காக்கும் ரோபோ; மயிலம் கல்லுாரி மாணவர்கள் சாதனை

தீ விபத்தில் மக்களை காக்கும் ரோபோ; மயிலம் கல்லுாரி மாணவர்கள் சாதனை

தீ விபத்தில் மக்களை காக்கும் ரோபோ; மயிலம் கல்லுாரி மாணவர்கள் சாதனை

ADDED : ஆக 02, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : மயிலம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், தீ விபத்துகளில் இருந்து தீயை கட்டுப்படுத்தி மனிதர்கள், அவர்களின் உடமைகளை மீட்டெடுக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

மயிலம் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள், தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஜாக் பெனிட்ரிக், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஜானி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை லோகேஸ்வரி ஆகியோர் இணைந்து புதிய ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை பேராசிரியர் விஜயராகவன் வழிகாட்டுதலின் பேரில், உருவாக்கப்பட்ட ரோபா செயல்விளக்க நிகழ்ச்சியில் மயிலம் பொறியியல் கல்லுாரி இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன், ஒருங்கிணைப்பாளர் ரகுராமன், தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவர் கலைவாணி பங்கேற்றனர்.

கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் அந்த மாணவர்களை, மணக்குள விநாயகர் மற்றும் மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளைத் தலைவர் தனசேகரன், கல்விக்குழுமம் செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us