/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆவணங்களின்றி பணம், பரிசு பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் ஆவணங்களின்றி பணம், பரிசு பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்
ஆவணங்களின்றி பணம், பரிசு பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்
ஆவணங்களின்றி பணம், பரிசு பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்
ஆவணங்களின்றி பணம், பரிசு பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்
ADDED : ஜூன் 15, 2024 06:14 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத் தில், ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட் டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள், மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 பறக்கும் படை குழுக்களும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும் இயங்கி வரு கிறது.
இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் அல்லது 10,000 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புடைய பொருட்களை அனைத்து நபர்களும், உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி பொருட் களை எடுத்துச் சென்றால், தேர்தல் பறக்கும் படை குழுவினர் மூலம் அந்த பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப் படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.