Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண்ணை திட்டிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை திட்டிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை திட்டிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை திட்டிய 4 பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 10, 2024 01:26 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெண்ணை திட்டிய 4 மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு மனைவி பிரியா, 29; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50; இவரது மகன்கள் பரத், 20; சாரதி, 24; ராகுல், 22; உறவினர்கள். இவர்களுக்குள் நிலம் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

கடந்த 3ம் தேதி, வி.அரியலுாரில் உள்ள பிரியா நிலத்தில் உள்ள சவுக்கு மரத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் ஏறியுள்ளார்.

இதைப்பார்த்த பிரியா, கலையரசனை கீழே இறங்கும்படி கூறிய போது, ரவி உட்பட 4 பேரும் சேர்ந்து பிரியாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார், ரவி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us