/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 12, 2024 06:33 AM
செஞ்சி: செஞ்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சனாவுல்லா, 55; இவர், நேற்று முன்தினம் இரவு தனது மகன் அப்துல்லா, 30; நண்பர் சுதர்சன், 50; ஆகியோருடன் மேல்மலைனுாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வாடகை காரில் சென்றார்.
காரை டிரைவர் ஜாகீர் உசேன், 35; ஓட்டினார். இரவு 10:30 மணியளவில் திரும்பி வரும் போது மேலச்சேரி கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த சனாவுல்லா முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனையிலும், அப்துல்லா செஞ்சி அரசு மருத்துமனையிலும், சுதர்சன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். டிரைவர் காயமின்றி தப்பினார்.
புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.