/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தீவிர தேர்தல் பிரச்சாரம் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தீவிர தேர்தல் பிரச்சாரம்
பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தீவிர தேர்தல் பிரச்சாரம்
பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தீவிர தேர்தல் பிரச்சாரம்
பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தீவிர தேர்தல் பிரச்சாரம்
ADDED : ஜூலை 07, 2024 04:14 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க.,வேட்பாளர் அன்புமணி மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு ஓட்டு சேகரித்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் கொசப்பாளையம், கக்கனுார்,அத்தியூர் திருக்கை, அகரம் சித்தாமூர்,வெங்கந்துார்,சூரப்பட்டுஉள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:
எதிர்காலத்தில் அரசு பணிகளில், கல்வியில் வாய்ப்புகள் வேண்டி கடந்த 45 ஆண்டுகளாக இடஓதுக்கீடு கேட்டு போராடி வரும் நிறுவனர் ராமதாஸ், டாக்டர் அன்புமணிஆகியோரின் கரத்தை வலுப்படுத்த வேட்பாளராக என்னை நிறுத்தியுள்ளனர்.
நான் வெற்றி பெற்றால் சட்டசபைகளில் உங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி நிறைவேற்றி தந்திடுவேன். எனக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என்று பேசினார்.
பா.ம.க.,தொகுதி பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அமைப்பாளர்கள் பழனிவேல் ,மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் சிவசக்தி, ஜெயராஜ், ராணிப்பேட்டை சரவணன், அரவிந்த், ஞானவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.