/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 6 மாடுகள் பரிதாப பலி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 6 மாடுகள் பரிதாப பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 6 மாடுகள் பரிதாப பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 6 மாடுகள் பரிதாப பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 6 மாடுகள் பரிதாப பலி
ADDED : ஜூலை 07, 2024 04:13 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 6 மாடுகள் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த தென்பேர் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த நாகப்பன் மனைவி ஜெயலட்சுமி,50: இவர் நேற்று காலை 10 மணியளவில் மேய்ச்சலுக்காக தனது 11 பசு மாடுகளை வயல்வெளி பகுதிக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது ஈச்சங்குப்பத்தை சேர்ந்த சரவணன் என்பவரது சவுக்கு வயலில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்த போது அங்கிருந்த மின்சார ஒயர் வயலில் அறுந்து கிடந்துள்ளது. இந்த சமயத்தில் பிற்பகல் 1 மணியளவில் அந்த வழியாக சென்ற 6 மாடுகள் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தது;
இதுபற்றி தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன், கால்நடை மருத்துவர் சுந்தரேசன், பெரியதச்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, வி.ஏ.ஓ., தமிழரசி வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.