/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாகச பெண்களுக்கு விருது: விண்ணப்பம் வரவேற்பு சாகச பெண்களுக்கு விருது: விண்ணப்பம் வரவேற்பு
சாகச பெண்களுக்கு விருது: விண்ணப்பம் வரவேற்பு
சாகச பெண்களுக்கு விருது: விண்ணப்பம் வரவேற்பு
சாகச பெண்களுக்கு விருது: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 30, 2024 06:27 AM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் வீர, தீர சாகசம் செய்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
சுதந்திர தின விழாவில், சமூகத்தில் தானாக முன் வந்து தைரியமாகவும், தனித்தன்மையோடும் கூடிய வீரமான, துணிச்சலோடு எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க பெண்மணி ஒருவருக்கு அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது நடவடிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது' ஆண்டுதோறும் முதல்வர் மூலம் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ரொக்க பரிசு, தங்கப்பதக்கம், சான்று வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தகுதியுடையோர் தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீ விபத்து ஆகியவற்றில் இருந்து பாதித்தோரை மீட்டெடுத்தல், திருட்டு, கொள்ளை முயற்சியை தடுத்தல் ஆகிய துணிகர மற்றும் வீர, தீர சாகசம் செய்த பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுக்கு தகுதியானவர்கள், தமிழக அரசின் விருதுகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூலை 8ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.