/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கேலிவதை தடுப்பு சட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கேலிவதை தடுப்பு சட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கேலிவதை தடுப்பு சட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கேலிவதை தடுப்பு சட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கேலிவதை தடுப்பு சட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 11, 2024 04:40 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 'கேலிவதை தடுப்பு சட்டம்' பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். இதில், கேலிவதை தடுப்பு சட்டம் வர காரணமாக இருந்த கொலையை பற்றி, மாணவர்களுக்கு கூறப்பட்டது. இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் சமூகத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கூறினர்.
இதில், நீதிபதிகள் ரகுமான், வெங்கடேசன் ஆகியோர் சட்டம் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள், தண்டனைகள் பற்றி கூறினர். மேலும், மாணவர்கள் கவனத்தோடு பயில்வதோடு, எந்தவொரு குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது என தெரிவித்தனர். முன்னதாக, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர். சட்டப்பணிகள் ஆணைக்குகுழு செயலாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.