Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

ADDED : ஜூலை 12, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.

செஞ்சி பீரங்கிமேடு அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று ஆனி திருமஞ்சனம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு திருமுறை கழகத்தினர் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகருக்கு விபூதி, சந்தனம், பன்னீர், வெட்டி வேர், ஜவ்வாது உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.

காலை 8 மணிக்கு அபிஷேகம் நிறைவடைந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் திருவாசக பாடல்களை பாடினர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us