ADDED : ஜூன் 20, 2024 08:29 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தலை மீது மரக்கிளை விழுந்து காயமடைந்த மூதாட்டி இறந்தார்.
விழுப்புரம் அருகே பில்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்தாயி, 80; இவர், கடந்த 10ம் தேதி வீட்டின் பின்னால் நின்றிருந்தபோது, பலத்த காற்றால் வேப்பமரம் கிளை முறிந்து அவரது தலை மீது விழுந்து காயமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.