/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இளம்பெண்ணுடன் விபசாரம்; 2 வாலிபர்கள் கைது இளம்பெண்ணுடன் விபசாரம்; 2 வாலிபர்கள் கைது
இளம்பெண்ணுடன் விபசாரம்; 2 வாலிபர்கள் கைது
இளம்பெண்ணுடன் விபசாரம்; 2 வாலிபர்கள் கைது
இளம்பெண்ணுடன் விபசாரம்; 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 19, 2024 01:28 AM
மரக்காணம் : இளம் பெண்ணுடன் விபசாரத்தில் ஈடுபட்ட2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் போலீசார் நேற்று பெரிய முதலியார்சாவடியில் உள்ள ஒரு கெஸ்ட் அவுசில் திடீர் சோதனை நடத்தினர். அதில், ஒரு இளம் பெண்ணுடன் மூன்று வாலிபர்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசை பார்த்ததும் ஒருவர் தப்பியோடினார்.
பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜேந்திரன் மகன் புருஷோத்தமன், 23; இவர், புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்து வந்ததும், அவருடன் கோட்டக்குப்பம் ராஜூ மகன் வீரப்பன், 26; மற்றும் இவரது நண்பர் என மூவரும் இளம் பெண்ணுடன் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து வீரப்பன், புருஷோத்தமன் ஆகியோரை கைது செய்தனர்.
கெஸ்டு ஹவுஸ் மேளாளர் புதுச்சேரி கோவிந்தசாலை பாண்டியன் மகன் பவின், 23; எச்சரிக்கப்பட்டார். பிடிபட்ட இளம் பெண்ணிற்கு, போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.