/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டல்காரருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டல்காரருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டல்காரருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டல்காரருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டல்காரருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூலை 24, 2024 10:54 PM
விழுப்புரம்:விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்க மாநில தலைவர். இவர் தனது உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்காக, 2022ம் ஆண்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பணம் செலுத்தி, 25 பார்சல் சாப்பாடு வாங்கினார். அதற்கான ரசீதை தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தார்.
வீட்டிற்கு சென்ற ஆரோக்கியசாமி, உணவு பொட்டலங்களை முதியோருக்கு வழங்கியபோது ஊறுகாய் இல்லை.ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்ட போது, ஊறுகாய் வைக்காதது உறுதியானது. ஆனால், அதற்காக 25 ரூபாயை தர மறுத்துவிட்டார்.
இதுகுறித்து ஆரோக்கியசாமி, விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர், பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காததால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 30 ஆயிரம், வழக்கு செலவிற்கு 5,000, ஊறுகாய் பொட்டலத்திற்குரிய 25 ரூபாயை, 45 நாட்களில் வழங்க ஹோட்டல் உரிமையாளருக்கு உத்தரவிட்டனர்.