ADDED : ஜூன் 16, 2024 10:27 PM
விழுப்புரம் : வளவனுார் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று கோலியனுார் ரயில்வே கேட் அருகே ரோந்து சென்றனர்.
அங்கு, குட்கா பொருட்களை விற்பனை செய்த பனங்குப்பம் சேகர், 54; வளவனுார் அப்துல் ரகீம், 50; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.