Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 13 பதக்கம் வென்ற கிராமத்து மாணவர்

13 பதக்கம் வென்ற கிராமத்து மாணவர்

13 பதக்கம் வென்ற கிராமத்து மாணவர்

13 பதக்கம் வென்ற கிராமத்து மாணவர்

ADDED : ஜூலை 11, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் தற்காப்பு கலையில் 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் .

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி 49; மின்வாரியத்தில் வயர் மேன் ஆக பணிபுரிகிறார். இவரது மனைவி பார்வதி 42: இவர்களது மகன் மோகனவேல் ,16;இவர் தற்காப்பு கலையான பென் காக் சிலாட் போட்டியில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டு 11 தங்கப்பதக்கங்களையும் தலா ஒரு வெண்கலம், வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்.

பென் காக் சிலாட் தற்காப்பு கலையின் வரலாறு


இந்தோனேசியா ,மலேசியா, சிங்கப்பூர் ,புரூனே ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி பென்காக் சிலாட் என்னும் தற்காப்பு கலையை உருவாக்கியது. கடந்த பத்து ஆண்டுகளாக தேசிய செயலாளர் முகமது இக்பால் இவ் விளையாட்டை எடுத்து நடத்தி வந்தார் .தமிழ்நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநில செயலாளரும் மற்றும் தேசிய துணை செயலாளருமான மகேஷ்பாபு இவ்விளையாட்டினை எடுத்து நடத்தி வந்தார்.

பெரும்பாலும் இந்த தற்காப்பு கலை யாருக்கும் தெரியாத நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தில் பிறந்த மோகனவேல் கடந்த ஐந்தாண்டு காலமாக இந்த விளையாட்டினை பயிற்சி பெற்று பல பதக்கங்களை வென்றுள்ளார் கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற 37 வது தேசிய விளையாட்டில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தையும் வென்று இந்த விளையாட்டிற்கும் தனது கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us