/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 19, 2024 01:19 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப் பதிவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பொதுமக்கள் நுாறு சதவீத ஓட்டுப் பதிவு செய்வதை வலியுறுத்தி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். தொடர்ந்து, ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்டில் நின்று ஒரு விரல் உயர்த்தி செல்பி எடுத்து, பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஜனநாயக கடமையாக 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் யுவராஜ், தேர்தல் தனி தாசில்தார் ஜெயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ.,க்கள் அண்ணாமலை, சீனிவாசன் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.