ADDED : மார் 14, 2025 05:11 AM
மயிலம்: மயிலம் அருகே உள்ள கொணமங்கலம் கிராமத்தில் புதுச்சேரி ஈட்டன் பவர் குவாலிட்டி பிரைவேட் லிமிடெட், சிருஷ்டி பவுண்டேஷன் ஆகியன இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு சிருஷ்டி நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் புதுச்சேரி ஈட்டன் பவர் குவாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஜ்ஜாத் அலி, மேலாண் இயக்குனர் ஜோசப் வில்சன், பொது மேலாளர் அந்தோணி ஜெயக்குமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
சிருஷ்டி பவுண்டேஷனில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி, திறன் மேம்பாட்டிற்காக மினி டிராக்டர், சூரிய உலர்த்தி, கல்வி உதவித்தொகை, மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள்.