ADDED : ஜூன் 16, 2025 03:18 AM
வேலுார்: வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பெண்கள் வார்டில், பேரணாம்பட்டு அடுத்த கொத்தப்பல்லியை சேர்ந்த ராதா, 45, சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உதவியாக அவரது உறவினரான தொழிலாளி ராமு, 40, இருந்தார். கடந்த, 14ம் தேதி மாலை, 5:45 மணிக்கு வெளியே சென்றிருந்த ராமு, வார்டுக்கு திரும்பினார். அப்போது பணியிலிருந்த பெண் பயிற்சி டாக்டர், நர்ஸ் மற்றும் பணியாளர்கள், பார்வை நேரம் முடிந்து விட்டதால், வார்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ராமு வாக்குவாதம் செய்தார். அப்போது பெண் டாக்டரை தள்ளி விட்டு, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயிற்சி டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்களும் புற நோயாளிகள் பிரிவு கட்டடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி., மதிவாணன், தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதை தொடர்ந்து வேலுார் தாலுகா போலீசார், ராமுவை நேற்று கைது செய்தனர்.