/உள்ளூர் செய்திகள்/வேலூர்/அதிகாலையில் மான் வேட்டை; துப்பாக்கியுடன் 2 பேர் கைதுஅதிகாலையில் மான் வேட்டை; துப்பாக்கியுடன் 2 பேர் கைது
அதிகாலையில் மான் வேட்டை; துப்பாக்கியுடன் 2 பேர் கைது
அதிகாலையில் மான் வேட்டை; துப்பாக்கியுடன் 2 பேர் கைது
அதிகாலையில் மான் வேட்டை; துப்பாக்கியுடன் 2 பேர் கைது
ADDED : ஜன 06, 2024 07:03 AM
வேலுார் : வேலுார் அருகே காப்புக்காட்டில் மான் வேட்டையாடிய இருவர், துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனர்.
வேலுார் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி, பனமடங்கி காப்புகாட்டில், மான் வேட்டையாடப்படுவதாக சென்ற புகாரின்படி, லத்தேரி பிரிவு வனவர் அருணா தலைமையிலான வனக்காப்பாளர்கள் சென்றாயன்பள்ளி செம்மண் குட்டை பகுதியில், நேற்று அதிகாலை ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது புள்ளி மானை வேட்டையாடி, மொபட்டில் கொண்டு வந்த இருவர் சிக்கினர். விசாரணையில் விரிஞ்சிபுரம், செதுவாலையை சேர்ந்த கார்த்தி, 35, சஞ்சய், 18, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, வேட்டையாடப்பட்ட மான், வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, பைக்கை பறிமுதல் செய்தனர்.