/உள்ளூர் செய்திகள்/வேலூர்/திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் புத்தகமாக வெளியீடுதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் புத்தகமாக வெளியீடு
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் புத்தகமாக வெளியீடு
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் புத்தகமாக வெளியீடு
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் புத்தகமாக வெளியீடு
ADDED : ஜன 03, 2024 11:06 PM
வேலுார்:வேலுார், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், 300 கோடி ரூபாய் ஊழல் நடந்ததை, புத்தகமாக தொகுத்து, முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்க தலைவருமான பேராசிரியர் இளங்கோவன், பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டார்.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மற்றும் வேலுார் மாவட்டங்களை சேர்ந்த கலை, அறிவியல் கல்லுாரிகள், வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், 22 முறைகேடுகள் மூலமாக, 300 கோடி ரூபாய் அளவிற்கு, ஊழல் நடந்தததாக கூறி, ஊழல் குறித்து புத்தகமாக தொகுத்து, பேராசிரியர் இளங்கோவன், திருவள்ளுவர் பல்கலைக்கழக நுழைவாயில் முன் வெளியிட ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், ஊழல் புத்தகத்தை நிருபர்களுக்கு மட்டும் வழங்கினார். மேலும், நீதிமன்ற அனுமதி பெற்று அனைவருக்கும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த புத்தகத்தில், தேர்வு முறைகேடுகள் ஒப்பந்த முறைகேடு, பட்டங்கள் திருட்டுத்தனமாக விற்பனை, கவர்னர் கையொப்பமிட்டதை மாற்றி, பதிவையும் மாற்றி, பட்டங்களை கொடுத்தது, தேர்வில் தோல்வி அடைந்தவர்களிடம் பணம் பெற்று தேர்ச்சியடைய செய்தது உள்ளிட்ட, 22 முறைகேடுகள், இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.