/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ பேராசிரியருக்கு தொல்லை துணை முதல்வர் மீது வழக்கு பேராசிரியருக்கு தொல்லை துணை முதல்வர் மீது வழக்கு
பேராசிரியருக்கு தொல்லை துணை முதல்வர் மீது வழக்கு
பேராசிரியருக்கு தொல்லை துணை முதல்வர் மீது வழக்கு
பேராசிரியருக்கு தொல்லை துணை முதல்வர் மீது வழக்கு
ADDED : மார் 20, 2025 01:31 AM
வேலுார்:வேலுாரில் தனியார், கிறிஸ்துவ கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை முதல்வர் மீது, ஏழு பிரிவுகளில் வேலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வேலுாரில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ பேராய கட்டுப்பாட்டில் இயங்கும், ஊரீஸ் கல்லுாரியில், நான்கு ஆண்டுகளுக்கு முன், பிஎச்.டி., படிப்பிற்காக, 25 வயது மாணவி சேர்ந்தார். இவருக்கு வழிகாட்டி பேராசிரியராக கல்லுாரி துணை முதல்வர் அன்பழகன், 52, இருந்தார். அவர் அப்பெண்ணை, தான் பணியாற்றிய துறையில், கவுரவ விரிவுரையாளராக நியமித்து, பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்பெண்ணுக்கு, சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். பாதிக்கப்பட்ட மாணவி, வேலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அங்கு புகாரை வாங்க மறுத்ததால், வேலுார் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, வேலுார் அனைத்து மகளிர் போலீசார், கல்லுாரி துணை முதல்வர் அன்பழகன் மீது, ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.