/உள்ளூர் செய்திகள்/வேலூர்/மிளகாய் பொடி தூவி 50 பவுன் நகை, ரூ.9 லட்சம் வழிப்பறிமிளகாய் பொடி தூவி 50 பவுன் நகை, ரூ.9 லட்சம் வழிப்பறி
மிளகாய் பொடி தூவி 50 பவுன் நகை, ரூ.9 லட்சம் வழிப்பறி
மிளகாய் பொடி தூவி 50 பவுன் நகை, ரூ.9 லட்சம் வழிப்பறி
மிளகாய் பொடி தூவி 50 பவுன் நகை, ரூ.9 லட்சம் வழிப்பறி
ADDED : ஜன 06, 2024 01:03 PM
குடியாத்தம்:வேலுார் அருகே மிளகாய் பொடி துாவி, 50 பவுன் நகை, 9 லட்சம் ரூபாயை பறித்தை பைக் கொள்ளையரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.வேலுார் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 45; குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதி நகை கடைகளில், தங்க நகை கொள்முதல் செய்து, வெவ்வேறு கடைகளுக்கு கொண்டு சென்று வினியோகிக்கிறார்.
அதற்கான தொகையை வசூல் செய்யும் ஏஜென்டாகவும் வேலை செய்கிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான, அன்பரசன், 40, என்பவரை துணைக்கு அழைத்து கொண்டு, நேற்று முன்தினம் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டார். பரதராமி பகுதியில் வேலைகளை முடித்து கொண்டு, இருவரும் குடியாத்தம் நோக்கி, ஒரே பைக்கில் இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டனர். குட்லவாரி பள்ளி அருகே சென்றபோது, பின் தொடர்ந்து இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர், ரங்கநாதன் பைக்கை வழிமறித்தனர். ரங்கநாதன், அன்பரசன் மீது மிளகாய் பொடியை எடுத்து துாவினர். இருவரும் நிலை தடுமாறிய நிலையில், ரங்கநாதனிடமிருந்து, 50 பவுன் நகை, 9 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். புகாரின்படி பரதராமி போலீசார் வழக்குப்பதிந்து, ஐந்து தனிப்படை அமைத்து விடிய விடிய வாகன சோதனை நடத்தினர். ஆனாலும் கொள்ளையர் பிடிபடவில்லை. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.