/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ லஞ்சம் வாங்கிய போலீஸ் ஊ.கா.ப., வீரர் 'சஸ்பெண்ட்' லஞ்சம் வாங்கிய போலீஸ் ஊ.கா.ப., வீரர் 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய போலீஸ் ஊ.கா.ப., வீரர் 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய போலீஸ் ஊ.கா.ப., வீரர் 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய போலீஸ் ஊ.கா.ப., வீரர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 26, 2024 10:07 PM
வேலுார்:வேலுார் அருகே ரோந்து பணியின்போது, வாகன ஓட்டிகளிடம், போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர், லஞ்சம் வாங்கிய வீடியோ பரவியதை தொடர்ந்து, இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து, வேலுார் எஸ்.பி., மணிவண்ணன் உத்தரவிட்டார்.
வேலுார் மாவட்டம், பள்ளிக்கொண்டா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் அருகே, கடந்த, 25 இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோர், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவியது. இது குறித்து, வேலுார் மாவட்ட எஸ்.பி., மணிவண்ணனுக்கு புகார் சென்றது.
அதன் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. இதையடுத்து, போலீஸ்காரர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, வேலுார் எஸ்.பி., மணிவண்ணன் நேற்று உத்தரவிட்டார்.