/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ ஆம்னி வேன் கவிழ்ந்ததில் குழந்தை பலி; மூவர் காயம் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் குழந்தை பலி; மூவர் காயம்
ஆம்னி வேன் கவிழ்ந்ததில் குழந்தை பலி; மூவர் காயம்
ஆம்னி வேன் கவிழ்ந்ததில் குழந்தை பலி; மூவர் காயம்
ஆம்னி வேன் கவிழ்ந்ததில் குழந்தை பலி; மூவர் காயம்
ADDED : ஜூலை 27, 2024 12:48 AM
ஆம்பூர்:வேலுார், சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் நபில் சையத். இவரது மனைவி ஆலியா யாஷ்மின், 26. இவர், நேற்று முன்தினம் மாலை வாணியம்பாடியில் உறவினர் வீட்டிற்கு ஆம்னி வேனில் சென்றார். கொணவட்டத்தைச் சேர்ந்த சையத் முஜாஹித், 27, காரை ஓட்டினார். காரில் ஆலியா யாஷ்மினின் மகள் உமேராபாத்திமா, 10, சத்துவாச்சரியைச் சேர்ந்த சலீம் மகள் பர்கா தஸ்மீன், 6, அதே பகுதியைச் சேர்ந்த நபீன் மகள் நசீர் உதிர்காலில், 1, ஆகியோர் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் மேம்பாலம் அருகே ஆம்னி வேன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் சென்ற ஒரு வயது குழந்தை நசீர் உதிர்காலில், சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும் பயணம் செய்த மூன்று பேர் படுகாயமடைந்து, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.