/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ ரயிலில் சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை ரயிலில் சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
ரயிலில் சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
ரயிலில் சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
ரயிலில் சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 06, 2024 02:58 AM
வேலுார்,:சென்னை, வடபழனியை சேர்ந்தவர் சாமுவேல், 68. இவர், பெங்களூரு ஆர்.எஸ்.புரத்தில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் 2022 மே, 15ல், பெங்களூரு - சென்னை மெயில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் சென்னைக்கு பயணம் செய்தார்.
அதே பெட்டியில், 9 வயது சிறுமி, தாயுடன் பயணித்தார். ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனை கடந்த சிறிது நேரத்தில் சாமுவேல், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் தாய் ரயில்வே போலீஸ் உதவி எண்ணில் புகார் தெரிவித்தார்.
ரயில்வே போலீசார் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் சாமுவேலை கைது செய்தனர். வேலுார் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் விசாரித்து, சாமுவேலுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.