/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 07:11 PM
வேலுார்:வேலுார், முத்தரங்கம் அரசினர் கலைக்கல்லுாரி நுழைவாயிலில் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலுார், ஓட்டேரியிலுள்ள அரசு முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லுாரியில், 3,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு கவுரவ விரிவுரையாளர்களாக, 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, தொகுப்பூதியமாக மாதம், 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், உயர்நீதி மன்ற மதுரை கிளை, கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 50,000 ரூபாயாக தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக அமல்படுத்தக்கோரி நேற்று கவுரவ விரிவுரையாளர்கள், கல்லுாரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.