/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கிணற்றில் தவறி விழுந்து இரு இளம்பெண்கள் பலிகிணற்றில் தவறி விழுந்து இரு இளம்பெண்கள் பலி
கிணற்றில் தவறி விழுந்து இரு இளம்பெண்கள் பலி
கிணற்றில் தவறி விழுந்து இரு இளம்பெண்கள் பலி
கிணற்றில் தவறி விழுந்து இரு இளம்பெண்கள் பலி
ADDED : ஜன 28, 2024 01:45 AM

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி - சசிகலா தம்பதியின் மூத்த மகள் தர்ஷினி, 19; திருச்சி தனியார் கல்லுாரி மாணவி. மற்றொரு மகள் வேம்பு, 16; பிளஸ் 2 மாணவி. மகன் லோகேஸ்வரன், 13; ஏழாம் வகுப்பு மாணவர்.
அவர்கள் வயலில், நேற்று நெல் அறுவடை பணி நடைபெற்றதால், தாயுடன் மூன்று பேரும் வயலுக்கு சென்றனர். சசிகலா வேலையில் இருந்த போது, தர்ஷினி, வேம்பு வயல் கிணற்றில் இறங்கினர்.
அதில், வேம்பு கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தர்ஷினி, அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.
ஆனால், இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். தீயணைப்பு துறையினர் பலியான சகோதரிகள் உடலை மீட்டனர். முசிறி போலீசார் விசாரிக்கின்றனர்.