/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ ரூ.1,200 கோடிக்கு ஆன்லைன் மோசடி ஓய்வு டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு ரூ.1,200 கோடிக்கு ஆன்லைன் மோசடி ஓய்வு டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு
ரூ.1,200 கோடிக்கு ஆன்லைன் மோசடி ஓய்வு டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு
ரூ.1,200 கோடிக்கு ஆன்லைன் மோசடி ஓய்வு டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு
ரூ.1,200 கோடிக்கு ஆன்லைன் மோசடி ஓய்வு டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு
ADDED : மார் 21, 2025 01:58 AM
திருச்சி:''தமிழகத்தில், கடந்த ஆண்டு, 1,200 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் மோசடி நடந்துள்ளது,'' என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.
திருச்சியில் நடந்த சர்வதேச லயன்ஸ் சங்க மாநாட்டில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு மட்டும், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.
தற்போது, மொபைல் நிறுவனங்கள் பெயரை சொல்லி, பண மோசடி செய்ய துவங்கி உள்ளனர்.
கடந்த ஆண்டு, ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக, 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இழந்த பணத்தை மீட்பது சவாலாக உள்ளது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
ஆன்லைனில் பணத்தை இழந்து விட்டால், 24 மணி நேரத்துக்குள் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, புகார் அளித்தால், பணத்தை மீட்க முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.