/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ மணப்பாறை நகராட்சியில் ஒரே நாளில் 14 பேருக்கு நாய்க்கடி மணப்பாறை நகராட்சியில் ஒரே நாளில் 14 பேருக்கு நாய்க்கடி
மணப்பாறை நகராட்சியில் ஒரே நாளில் 14 பேருக்கு நாய்க்கடி
மணப்பாறை நகராட்சியில் ஒரே நாளில் 14 பேருக்கு நாய்க்கடி
மணப்பாறை நகராட்சியில் ஒரே நாளில் 14 பேருக்கு நாய்க்கடி
ADDED : மார் 19, 2025 01:33 AM

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில், மஸ்தான் தெரு, காந்திநகர், மணப்பாறைபட்டி, ராஜீவ்நகர் பகுதிகளில், சுந்தர்ராஜன் - சத்யவதி தம்பதி உட்பட, 14 பேரை நாய்கள் கடித்துள்ளன. அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மஸ்தான் தெருவில் மட்டும், 9 பேரை நாய்கள் கடித்துள்ளன.
மணப்பாறை பா.ஜ., தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''மணப்பாறை நகராட்சி மக்கள் தினமும் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார்.