/உள்ளூர் செய்திகள்/திருச்சி/காப்புக்காடில் வழித்தடம் அமைத்த 15 பேருக்கு அபராதம்காப்புக்காடில் வழித்தடம் அமைத்த 15 பேருக்கு அபராதம்
காப்புக்காடில் வழித்தடம் அமைத்த 15 பேருக்கு அபராதம்
காப்புக்காடில் வழித்தடம் அமைத்த 15 பேருக்கு அபராதம்
காப்புக்காடில் வழித்தடம் அமைத்த 15 பேருக்கு அபராதம்
ADDED : ஜன 03, 2024 10:33 PM
திருச்சி,:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையிலும், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையிலும், 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள், மலைப் பயிர்கள் சாகுபடி செய்வதோடு, விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
மலையில் உள்ள கிராம மக்கள், விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவும், விவசாய இடுபொருட்கள் வாங்கவும், மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
மலைவாழ் மக்களின் போக்குவரத்து வசதிக்காக, அரசு சார்பில் சாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மலைவாழ் மக்கள் வனப்பகுதியில், ஒற்றையடிப் பாதை போன்ற வழித்தடங்களை ஏற்படுத்தி, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
விலங்குகள் வேட்டை, மரங்கள் திருட்டு போன்றவற்றை தடுப்பதற்காக, வனத்துறையினர் இதற்கு முறையாக அனுமதி வழங்குவதில்லை.
எனினும், திருச்சி மாவட்டம் வைரிசெட்டிப்பாளையம் பஞ்சாயத்தில் சூக்லாம்பட்டி என்ற மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள், கொல்லிமலைப் பகுதியில் உள்ள பள்ளிக்காட்டுப் பட்டிக்கு செல்ல வழித்தடம் அமைத்து தருமாறு, வனத்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முறைப்படி அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், சூக்லாம்பட்டி மற்றும் பள்ளிக்காட்டுப் பட்டி கிராம மக்கள் சிலர், காப்புக்காடில் உள்ள மரம், செடி, கொடிகளை வெட்டி, 1 கி.மீ.,க்கு வழித்தடம் அமைத்ததாக, மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சம்பந்தப்பட்ட வனப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள், காப்புக்காடில் வழித்தடம் அமைத்ததாக, இரண்டு கிராமங்களை சேர்ந்த 15 பேருக்கு, 3.40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.