/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய மாஜி அமைச்சர்.கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய மாஜி அமைச்சர்.
கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய மாஜி அமைச்சர்.
கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய மாஜி அமைச்சர்.
கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய மாஜி அமைச்சர்.
ADDED : ஜன 31, 2024 03:08 PM

திருச்சி: திருச்சி மாவட்டம் , பாலக்கரை பகுதியில், இரவு எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் தங்கமணி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து, அதிமுக நிர்வாகிகள் அவரை வழி அனுப்புவதற்காக சென்றனர். முசிறி பிரிவு சாலை பகுதியில் அதிமுக, நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக காரில் சென்றபோது மண்ணச்சநல்லூர் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரியின் கார் மீது பின்னால் சென்ற முன்னாள் அமைச்சர் அண்ணாவியின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர். முன்னாள் அமைச்சர் அண்ணாவியின் கார் டிரைவர் மட்டும் லேசான காயமடைந்தார்.