/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ 'ஸ்பிரிட்' விற்றால் மருத்துவமனைக்கு 'சீல்' திருச்சி கலெக்டர் எச்சரிக்கை 'ஸ்பிரிட்' விற்றால் மருத்துவமனைக்கு 'சீல்' திருச்சி கலெக்டர் எச்சரிக்கை
'ஸ்பிரிட்' விற்றால் மருத்துவமனைக்கு 'சீல்' திருச்சி கலெக்டர் எச்சரிக்கை
'ஸ்பிரிட்' விற்றால் மருத்துவமனைக்கு 'சீல்' திருச்சி கலெக்டர் எச்சரிக்கை
'ஸ்பிரிட்' விற்றால் மருத்துவமனைக்கு 'சீல்' திருச்சி கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 22, 2024 01:47 AM
திருச்சி:'மருத்துவமனைகளில் இருந்து ஸ்பிரிட் விற்கப்படுவது தெரிந்தால், மருத்துவமனைகளுக்கு 'சீல்' வைக்கப்படும்' என்று, திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் கடுமையான சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மீது, பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடியது. ஆகையால், தொழிற்சாலைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.டி.ஆர்.சி., வாயிலாக மருத்துவமனைகள் ஸ்பிரிட் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய இருப்பு விபரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அதில் தவறு இருந்தாலோ, ஸ்பிரிட் விற்றாலோ, மருத்துவமனை மூடப்படும். திருச்சி மாவட்டம், பச்சமலையில் சாராயம் விற்பனை தொடர்பான தகவல்கள் வந்துள்ளதால், 20 பேர் கொண்ட குழு, அங்கேயே தங்கி கண்காணித்து வருகின்றனர். அங்கு சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.