ADDED : ஜூன் 22, 2024 01:45 AM
திருச்சி,:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள வாழ்மால்பாளையம் பகுதியில் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி, அதில் போதைக்காக கலப்படம் செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மண்ணச்சநல்லுார் போலீசார் அப்பகுதியில் நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கோமாளி கொட்டம் குளம் அருகே மதுபாட்டில் விற்றவரை பிடித்தனர்.
அவர், வயல்நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார், 42, என்பதும், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கி, அவற்றில் போதைக்காக சில பொருட்களை கலந்து விற்றது, விசாரணையில் தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து, 20க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.