/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ தாக்க முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் தாக்க முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்
தாக்க முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்
தாக்க முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்
தாக்க முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்
ADDED : ஜூலை 05, 2024 09:52 PM

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார், 28. ஆதிகுடி அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்த ராஜா, 28. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. நண்பர்களான இருவரும், 3ம் தேதி இரவு, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, லால்குடியில் மது அருந்திய போது, அவர்களுக்குள் தகராறு முற்றியது.
ஆத்திரமடைந்த ராஜா, நண்பர்களுடன் சேர்ந்து, நவீன்குமாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். கொலை தொடர்பாக லால்குடி போலீசார், ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத் உட்பட இருவரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியும், ரவுடி பட்டியலிலும் உள்ளவருமான ராஜாவை போலீசார் தேடினர்.
இந்நிலையில், சிறுகனுார் அருகே வனப்பகுதியில் ராஜா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் வனப்பகுதிக்கு சென்ற போலீசார், ராஜாவை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர்.
ராஜா மறைத்து வைத்திருந்த அரிவாளால், போலீசாரை தாக்கி, தப்ப முயன்றார். பாதுகாப்பு கருதி, இன்ஸ்பெக்டர் சரவணன், துப்பாக்கியால் சுட்டார். இதில், வலது காலில் காயமடைந்த ராஜாவை, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை, சுட்டுப் பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.