/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ பரிசு கொடுக்க வாள் எடுத்து வந்தவர் கைது பரிசு கொடுக்க வாள் எடுத்து வந்தவர் கைது
பரிசு கொடுக்க வாள் எடுத்து வந்தவர் கைது
பரிசு கொடுக்க வாள் எடுத்து வந்தவர் கைது
பரிசு கொடுக்க வாள் எடுத்து வந்தவர் கைது
ADDED : ஜூலை 09, 2024 09:28 PM
திருச்சி:திருச்சி, பொன்மலைப்பட்டி அருகே, நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பட்டறை சுரேஷ் என்ற மைக்கேல் சுரேஷ், 44. இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாவட்ட செயலரான அவர், கடந்த 8ம் தேதி, தோட்டத்தில், நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பொன்மலைப்பட்டி போலீசார் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், மாத்துாரைச் சேர்ந்த சதீஷ்குமார், 30, என்பவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில், 80 செ.மீ., நீளம் கொண்ட பித்தளை வாள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இது குறித்து, அவரிடம் விசாரித்த போது, சுரேஷ் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்க வாளை எடுத்து சென்றது தெரிந்தது. அதனால், போலீசார், சதீஷ்குமாரை கைது செய்து, வாளையும் பறிமுதல் செய்தனர்.