/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.16 லட்சம் பறித்த கும்பல் நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.16 லட்சம் பறித்த கும்பல்
நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.16 லட்சம் பறித்த கும்பல்
நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.16 லட்சம் பறித்த கும்பல்
நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.16 லட்சம் பறித்த கும்பல்
ADDED : ஜூலை 18, 2024 09:28 PM
திருச்சி:திருச்சி கே.கே.நகரில், ஓம்சக்தி என்ற பெயரில் எக்ஸ்போர்ட் நிறுவனத்தை மணிகண்டன், 43, என்பவர் நடத்தி வருகிறார். இவர் கடந்த, 14ல் அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த ஏழு பேர் கும்பல், கத்தி, அரிவாளை காட்டி மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும், மணிகண்டனை காரில் கடத்தியது.
கீரனுார் அருகே உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் அவரை அடைத்து வைத்து, வங்கி மூலம், 12.40 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் பரிவர்த்தனை மூலம், 3.60 லட்சம் என, 16 லட்சம் ரூபாயை அந்த கும்பல் பறித்தது.
இதுகுறித்து போலீசில் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி, கடத்திய இடத்தில் மறுநாள் விட்டு தப்பியோடியது. நண்பர்கள் அறிவுரைப்படி, நேற்று முன்தினம் இரவு, திருச்சி கே.கே.நகர் போலீசில் மணிகண்டன் புகார் அளித்தார். அவரை, அந்த கும்பல் எதற்காக கடத்தியது என போலீசார் விசாரிக்கின்றனர்.