Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி: அவர் சொல்லும் காரணம்?

திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி: அவர் சொல்லும் காரணம்?

திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி: அவர் சொல்லும் காரணம்?

திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி: அவர் சொல்லும் காரணம்?

ADDED : ஜூலை 14, 2024 04:43 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருச்சி: திருச்சி மாவட்டம் ஏற்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர் (வயது 50) பிரதமர் மோடிக்கு கோயில் ஒன்றைக் கட்டி நாள் தவறாமல் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். பிரதமர் மோடியின் திட்டங்களால் பலன் பெற்றதன் காரணமாகவே இக்கோயில் கட்டியதாக விவசாயி சங்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, ஏற்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயம் செய்து வருகிறார். அவர் பிரதமர் மோடிக்கு கோயில் ஒன்றைக் கட்டி நாள் தவறாமல் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.

இது குறித்து சங்கர் கூறியதாவது: என்னுடைய சொந்த நிலத்தில், கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முதலாக பிரதமர் மோடிக்கு கோயில் கட்டினேன். சுமார் 1.25 லட்சம் ரூபாய் சொந்தமாக செலவு செய்து ஆறு மாதங்களில் கோயில் கட்டினேன். தேங்காய் மாங்காய், மரவள்ளி போன்ற விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், பிரதமர் மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன். மோடி மூன்றாவது முறை பிரதமாக வேண்டும், என்று பழநிமலை முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.

அன்னதானம்

அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், வரும் தை மாதம் முடிந்த உடன், தங்கத் தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடா வெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன். பிரதமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. 2030ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us