/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ மதுவை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தவர் மீது போலீஸ் வழக்கு பூரண மதுவிலக்கு கோரி விரக்தியில் கடிதம் மதுவை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தவர் மீது போலீஸ் வழக்கு பூரண மதுவிலக்கு கோரி விரக்தியில் கடிதம்
மதுவை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தவர் மீது போலீஸ் வழக்கு பூரண மதுவிலக்கு கோரி விரக்தியில் கடிதம்
மதுவை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தவர் மீது போலீஸ் வழக்கு பூரண மதுவிலக்கு கோரி விரக்தியில் கடிதம்
மதுவை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தவர் மீது போலீஸ் வழக்கு பூரண மதுவிலக்கு கோரி விரக்தியில் கடிதம்
ADDED : ஜூலை 09, 2024 08:14 PM

திருச்சி:திருச்சி அருகே பூரண மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி, டாஸ்மாக் மதுக்கடை முன், மதுவை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், லாால்குடி அருகே உள்ள மருதுார் கீழ கல்லுக்குழியை சேர்ந்தவர் பழனிசாமி, 43, கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இவர் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள இரு டாஸ்மாக் கடைகள் முன், கையில் ஒரு கடிதத்துடன், மதுபானங்களை தன் உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், 'சமயபுரம் பகுதியில் போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. சிறுவர்கள் கூட மது குடிக்கின்றனர். ஆகையால், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தீக்குளிக்க முடிவு செய்தேன். என் உயிர் போவதால், மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்' என, அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் மீது, தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பழனிசாமி தீக்குளிக்க முயற்சித்த போது தன் கையில் வைத்திருந்த கடிதத்தில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.
என்னுடைய மரணம் கண்டிப்பாக இளைஞர்களையும், பெண்களையும், மது இல்லாத தமிழகத்தை உருவாக்க போராட வைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய ஒரு ஓட்டு டி.வி.கே., கட்சிக்கு இல்லாமல் போவதை எண்ணி வருந்துகிறேன். வாழ்க மது இல்லாத தமிழகம். எங்களை ரொம்ப ஏமாத்திட்டாங்க இந்த அரசு.
இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.