/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ 'தமிழக அரசு' ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்து கடத்தியோர் கைது 'தமிழக அரசு' ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்து கடத்தியோர் கைது
'தமிழக அரசு' ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்து கடத்தியோர் கைது
'தமிழக அரசு' ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்து கடத்தியோர் கைது
'தமிழக அரசு' ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்து கடத்தியோர் கைது
ADDED : ஜூலை 03, 2024 02:07 AM
மணப்பாறை:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொய்கைப்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகர், 44. படிக்காமல், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த இவர், ஆங்கில மருந்து கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீரப்பூரில் உள்ள தன் மருந்து கடையில் அவர் இருந்தார். அப்போது, 'தமிழ்நாடு அரசு' என்று எழுதப்பட்ட, 'சைலோ' காரில் வந்த ஆறு பேர், தங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து, மருத்துவம் படிக்காமல் வைத்தியம் செய்வது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி, சுதாகரை காரில் கடத்தினர். பின், சுதாகர் குடும்பத்தாரிடம், அவரை விடுவிக்க, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர்.
தகவலறிந்த மணப்பாறை போலீசார், மஞ்சம்பட்டி அருகே கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து, சுதாகரை மீட்டனர்.
இதையடுத்து, காரில் வந்த, கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நவ்ஷாத், 45, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், 42, மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து, 53, உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.