/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ லஞ்ச எஸ்.ஐ., இடமாற்றம் 'மைக்'கில் எஸ்.பி., அதிரடி லஞ்ச எஸ்.ஐ., இடமாற்றம் 'மைக்'கில் எஸ்.பி., அதிரடி
லஞ்ச எஸ்.ஐ., இடமாற்றம் 'மைக்'கில் எஸ்.பி., அதிரடி
லஞ்ச எஸ்.ஐ., இடமாற்றம் 'மைக்'கில் எஸ்.பி., அதிரடி
லஞ்ச எஸ்.ஐ., இடமாற்றம் 'மைக்'கில் எஸ்.பி., அதிரடி
ADDED : ஜூலை 12, 2024 01:43 AM
சமயபுரம்:திருச்சி மாவட்டம், சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் ராஜ்குமார், 50. இவர் மீது லஞ்ச புகார்கள் அதிகமாக உள்ளன. சமயபுரம் கோவிலுக்கு மொட்டை போட வரும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகத்துக்கு தெரியாமல் வேறு இடத்தில் மொட்டை போடும் விவகாரத்தில், எஸ்.ஐ., ராஜ்குமார் மாதம், 3,000 ரூபாய் மாமூல் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவர் ஒருவரிடம் பேசிய ஆடியோ பதிவு, திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு கிடைத்துள்ளது. அந்த ஆடியோவை எஸ்.பி., ஓபன் மைக்கில் போட்டு விட, மாவட்ட போலீசார் அனைவரும், எஸ்.ஐ., ராஜ்குமாரின் லஞ்ச ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆடியோ முடிந்த பின், மைக்கில் பேசிய எஸ்.பி., வருண்குமார், 'பிச்சை ராஜை அப்படியே ஏ.ஆர்.,க்கு போக சொல்லுங்க' என்று உத்தரவிட்டார். லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,யை, ஓபன் மைக்கில் எஸ்.பி., இடமாற்றம் செய்த சம்பவம், திருச்சி போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.