/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ காதல் விவகாரத்தில் கோஷ்டி மோதல் : 6 பேருக்கு கத்திக்குத்து; ஒருவர் கொலை காதல் விவகாரத்தில் கோஷ்டி மோதல் : 6 பேருக்கு கத்திக்குத்து; ஒருவர் கொலை
காதல் விவகாரத்தில் கோஷ்டி மோதல் : 6 பேருக்கு கத்திக்குத்து; ஒருவர் கொலை
காதல் விவகாரத்தில் கோஷ்டி மோதல் : 6 பேருக்கு கத்திக்குத்து; ஒருவர் கொலை
காதல் விவகாரத்தில் கோஷ்டி மோதல் : 6 பேருக்கு கத்திக்குத்து; ஒருவர் கொலை
ADDED : ஜூலை 08, 2024 05:17 PM
திருச்சி:திருச்சி, திருவானைக்காவல் அருகே, திருவளர்சோலையை சேர்ந்தவர் விக்னேஷ், 24; பொன்னி டெல்டா பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், திருவளர்சோலையில் பழக்கடை வைத்துள்ளார். விக்னேஷின் உறவினர் பெண்ணை, நாகேந்திரன் காதலிப்பது தொடர்பாக, அவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு, நாகேந்திரன், அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகியோர் சேர்ந்து விக்னேஷுடன் தகராறு செய்துள்ளனர். அதன் பின், நாகேந்திரன், ஜீவானந்தம், அவரது நண்பர்களான நெப்போலியன், 29, கதிரவன், 34, சங்கர்குரு, 35, கமலேஷ், 18, ஆகியோர் உட்பட ஒரு கும்பல், விக்னேஷ் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
இதனால், விக்னேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரண்டதால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. கட்டை, கல், கத்தி போன்ற ஆயுதங்களால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், நாகேந்திரன், ஜீவானந்தம், நெப்போலியன், கதிரவன், சங்கர்குரு, கமலேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், நெப்போலியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். கதிரவன் உட்பட இருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து, நெப்போலியன் உறவினர்கள் மருத்துவமைனையில் திரண்டனர். போலீசார் அவர்கைளை சமாதானப்படுத்தி, அப்புறப்படுத்தினர்.
நேற்று காலை, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நெப்போலியன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கல்லணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கமிஷனர் விவேகானந்தன் சுக்லா, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நீடித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து, விக்னேஷ், எசனக்கோரையை சேர்ந்த மனோஜ் உட்பட சிலரை பிடித்து விசாரிக்கின்றனர். இந்த கோஷ்டி மோதல் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.