/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ அண்ணாமலையார் மலையில் தீயில் கருகி மரங்கள் நாசம் அண்ணாமலையார் மலையில் தீயில் கருகி மரங்கள் நாசம்
அண்ணாமலையார் மலையில் தீயில் கருகி மரங்கள் நாசம்
அண்ணாமலையார் மலையில் தீயில் கருகி மரங்கள் நாசம்
அண்ணாமலையார் மலையில் தீயில் கருகி மரங்கள் நாசம்
ADDED : செப் 06, 2025 02:43 AM

தி.மலை:திருவண்ணாமலை மலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.
திருவண்ணாமலையில் உள்ள, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை, 6:00 மணியளவில் மலையின் வடக்கு பக்கத்தில், அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், மலை மீது தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதில், 3 ஏக்கர் பரப்பளவில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.
தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தன்னார்வலர்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மலையை சுற்றிய பகுதிகளில் புகை மூட்டம் காணப்பட்டது.