Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

ADDED : செப் 06, 2025 08:13 AM


Google News
திருவண்ணாமலை; ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி திதி நாளை, (7-ம் தேதி) அதிகாலை, 1:46 மணி முதல், 8ம் தேதி அதிகாலை, 12:30 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் வர உகந்த நேரம் என, திருவண்ணாமலை அருணா ச லேஸ்வரர் கோவில் நி ர்வாகம் அறிவித் துள்ளது.

திருவண்ணாம லையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள, 14 கி.மீ., தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இதில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மஹா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வர்.

இந்நிலையில், ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி திதி நாளை, (7-ம் தேதி) அதிகாலை, 1:46 மணி முதல், 8ம் தேதி, அதிகாலை 12:30 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும், 7ம் தேதி இரவு, 10:59 மணிக்கு தொடங்கி, 8ம் தேதி அதிகாலை, 1:26 வரை சந்திரகிரகணம் உள்ள நிலையில், வழக்கமாக கோவில் நடை இரவு, 7:30 மணிக்கு சாத்துப்படுவது வழக்கம்.

அதன்படி கோவில் நடை சாத்தப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படுவதால், சந்திர கிரகணத்தால் பக்தர்கள் தரிசனத்திற்கு பாதிப்பில்லை, சந்திர கிரகணம் முடிந்தவுடன், இரவு நேரங்களிலேயே கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us