ADDED : மார் 21, 2025 03:14 AM
செய்யாறு,:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தை சேர்ந்தவர் வினேத்குமார், 49; காஷ்மீரில், 62வது படை தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். கடந்த, 18ம் தேதி மதியம் 3:49 மணியளவில், காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில், வலது மார்பில் குண்டு பாய்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வீரமரணம் அடைந்தார்.
அவரது உடல், நேற்று சொந்த ஊரான வெம்பாக்கம் கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க, உடல் அடக்கம் செய்யப்பட்டது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் வினோத்குமாருக்கு, நர்மதா, 45, என்ற மனைவியும், ரஷிதா, 18, கீர்த்தனா, 15, என, இரு மகள்களும் உள்ளனர்.