/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தண்ணீர் இல்லை பி.டி.ஓ., ஆபீஸை முற்றுகையிட்ட மக்கள் தண்ணீர் இல்லை பி.டி.ஓ., ஆபீஸை முற்றுகையிட்ட மக்கள்
தண்ணீர் இல்லை பி.டி.ஓ., ஆபீஸை முற்றுகையிட்ட மக்கள்
தண்ணீர் இல்லை பி.டி.ஓ., ஆபீஸை முற்றுகையிட்ட மக்கள்
தண்ணீர் இல்லை பி.டி.ஓ., ஆபீஸை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : செப் 11, 2025 03:47 AM
வந்தவாசி:ஆறு மாதம் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து, பி.டி.ஓ., அலுவலகம் முன், காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்வணக்கம்பாடி கிராமத்தில், வந்தவாசி - திண்டிவனம் சாலை விரிவாக்க பணி நடப்பதால், கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த, 6 மாதங்களாக குடிநீரை பஞ்., நிர்வாகம் வினியோகிக்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள், விவசாய பம்பு செட்டுகளுக்கு சென்று, நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலி குடத்துடன், தெள்ளார் பி.டி.ஓ., அலுவலகம் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக ஊழியர்கள் கூறுகையில், 'சாலை விரிவாக்க பணி முடிந்தவுடன், குடிநீர் சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.