/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ அண்ணாமலையார் மலையில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ் அண்ணாமலையார் மலையில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்
அண்ணாமலையார் மலையில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்
அண்ணாமலையார் மலையில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்
அண்ணாமலையார் மலையில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்
ADDED : செப் 13, 2025 02:16 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு குறித்து, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம் கொண்டது. மலையில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள, பல்வேறு தீர்த்த குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதை அகற்ற சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அண்ணாமலையார் மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், முதல் கட்டமாக சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 1,500 வீடுகளுக்கு, ஒரு மாதமாக மின் இணைப்பு துண்டிப்பு செய்வது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 1, 6, 7, 14, 24 மற்றும், 26வது வார்டுகளில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள மலை மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு குறித்து அவசர அறிவிப்பு நோட்டீஸ், நகராட்சி பணியாளர்களால் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.