/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ காவிரியில் கரை ஒதுங்கிய மீன்களை கேரள மாநிலத்துக்கு விற்ற மீனவர்கள் காவிரியில் கரை ஒதுங்கிய மீன்களை கேரள மாநிலத்துக்கு விற்ற மீனவர்கள்
காவிரியில் கரை ஒதுங்கிய மீன்களை கேரள மாநிலத்துக்கு விற்ற மீனவர்கள்
காவிரியில் கரை ஒதுங்கிய மீன்களை கேரள மாநிலத்துக்கு விற்ற மீனவர்கள்
காவிரியில் கரை ஒதுங்கிய மீன்களை கேரள மாநிலத்துக்கு விற்ற மீனவர்கள்
ADDED : ஜூன் 15, 2025 02:28 AM
மேட்டூர்,
மேட்டூர் அணை அடிவாரம், 200 மெகாவாட் சுரங்கம், 50 மெகாவாட் அணை மின் நிலையங்கள் உள்ளன. இதில் இரு மாதங்களாக பராமரிப்பு பணி நடந்தது. அப்போது பயன்படுத்திய ஆயில் கழிவு, கீழ் பகுதியில் உள்ள தொட்டியில் தேங்கி நின்றன.
இந்நிலையில் கடந்த, 12ல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, மின் நிலையங்கள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தொட்டியில் தேங்கி நின்ற கழிவு, ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் ஆற்றில் வசித்த மீன்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால், நீரின் மேற்பகுதிக்கு வந்தன. அப்படி மேட்டூர் அணை அடிவாரம் முதல், செக்கானுார் கதவணை வரை, 10 கி.மீ.,க்கு, காவிரியாற்றில் மீன்கள் கரை ஒதுங்கின.
அந்த மீன்களை, கரையோர மீனவர்கள் உயிருடன் பிடித்து, நேற்று முன்தினம் மாலை, கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பினர். மீதி மீன்களை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விற்றனர். 2ம் நாளாக நேற்று, காவேரி கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில், ஆற்றின் கரையோரம் ஏராளமான மீன்கள், ஆங்காங்கே செத்து மிதந்தன.