/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தென்பெண்ணை ஆற்றில் 3வது நாளாக ரசாயன நுரை தென்பெண்ணை ஆற்றில் 3வது நாளாக ரசாயன நுரை
தென்பெண்ணை ஆற்றில் 3வது நாளாக ரசாயன நுரை
தென்பெண்ணை ஆற்றில் 3வது நாளாக ரசாயன நுரை
தென்பெண்ணை ஆற்றில் 3வது நாளாக ரசாயன நுரை
ADDED : ஜூன் 15, 2025 02:29 AM
ஓசூர், கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில், பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் மற்றும் நேற்று என, இரு நாட்களாக தொடர்ந்து, 981 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து, 981 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
நீரில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் கலந்திருந்ததால், நேற்று மூன்றாவது நாளாக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரில், ரசாயன நுரை ஏற்பட்டு, ஆற்றில் படர்ந்து துர்நாற்றம் வீசியது. நேற்றைய நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.