/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைதுசீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது
சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது
சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது
சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : ஜன 13, 2024 11:34 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, சீட்டு நடத்தி பொதுமக்களிடம், 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 48. இவர், அதே பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், 2020ம் ஆண்டு மாதாந்திர சீட்டில் சேர்ந்து, 5 லட்சம் ரூபாய் செலுத்தினார். பணம் கட்டி முதிர்ச்சியடைந்த நிலையிலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் மகேந்திரன் அலைக்கழித்தார்.மேலும், மோகன்ராஜ் அறிமுகப்படுத்தி வைத்த ஏழு பேர் செலுத்திய சீட்டு தொகை, 18 லட்சம் ரூபாயையும் தராமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், மோகன்ராஜ் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிந்து மகேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர். --