ஹத்ராஸ் சம்பவம் : போலே பாபா தலைமறைவா ?
ஹத்ராஸ் சம்பவம் : போலே பாபா தலைமறைவா ?
ஹத்ராஸ் சம்பவம் : போலே பாபா தலைமறைவா ?
ADDED : ஜூலை 03, 2024 08:58 PM

ஹத்ராஸ்: உ.பி மாநிலம் ஹத்ராசில் ஆன்மிக சொற்பொழி நிகழ்வில் சமூக விரோதிகள் சிலர் ஊடுருவினர். அவர்கள் தான் சம்பவத்திற்கு காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில், ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 116 பேர் உயிரிழந்தனர்.
ஆக்ரா நிகழ்ச்சி ரத்து
முன்னதாக ஹத்ராஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலே பாபா கூறியது, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் சமூக விரோதிகள் சிலர் ஊடுருவியிருக்கலாம், அவர்கள் தான் இதற்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே ‛ஆக்ரா' வில் நடத்த திட்டமிட்டிருந்த அடுத்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வை போலே பாபா ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைமறைவு ?
இந்நிலையில் போலீசார் தெரிவித்துள்ளதாவது, போலேபாபா என்ற நாராயண் ஹரியின் உண்மையான பெயர் சூரஜ்பால்சிங் , அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். ஹத்ராஸ் நிகழ்ச்சி நடத்த 80 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றதால் இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.