/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/தொட்டியில் விழுந்த 4 வயது குழந்தை பலிதொட்டியில் விழுந்த 4 வயது குழந்தை பலி
தொட்டியில் விழுந்த 4 வயது குழந்தை பலி
தொட்டியில் விழுந்த 4 வயது குழந்தை பலி
தொட்டியில் விழுந்த 4 வயது குழந்தை பலி
ADDED : ஜன 05, 2024 01:15 AM
செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. செய்யாறு சிப்காட்டிலுள்ள ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகன் மகேஸ்வரன், 4. நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, பக்கத்தில் ராமதாஸ் என்பவரது வீட்டில் வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான்.
இதில், குழந்தையின் அலறலை கேட்டு வந்தவர்கள், குழந்தையை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.